கோவையில் உயிரிழந்த மாணவி லோகேஷ்வரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்தார்.
மாணவி உயிரிழந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
பின்னர் உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பின்னர் இந்த வழக்கின் அடிப்படையில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவி லோகேஷ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…