கோவையில் இந்து முன்ணி போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம்..!
பொதுமக்கள்,கோவையில் இந்து முன்ணி போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் விஸ்வ இந்து பரிஷத் ரதயாத்திரை விவகாரத்தில் இந்து முன்னணியினரும், எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரில் பேரில் போலீசார் இரு தரப்பு நிர்வாகிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகளைல் விடுவிக்கக் கோரி கோவை துடியலூரில் சாலைமறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. நேரம் செல்லச் செல்ல போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்றுகொண்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து, சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் அவர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.