கொலை வழக்கில் கணவன்-மனைவிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!

Published by
Dinasuvadu desk

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 27). ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். ரெயில்வேயில் பணியாற்றினார். இவரும் தச்சநல்லூர் சங்கரநாராயணன் மகள் காவேரியும் காதலித்தனர். இதற்கு காவேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி அவர்கள் 3.5.2016 அன்று வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

வண்ணார்பேட்டையில் உள்ள விஸ்வநாதன் வீட்டிற்கு மகளை தேடி சங்கரநாராயணனும், அவருடைய மனைவி செல்லம்மாளும் சென்றனர். அப்போது வீட்டில் விஸ்வநாதனின் சகோதரி கல்பனா, அவருடைய குழந்தையுடன் இருந்தார். இருவரும் கல்பனாவை வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

முடிவில், கணவன்-மனைவி இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து 9.1.2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு

சங்கரநாராயணனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. அவருடைய மனைவி செல்லம்மாள் விடுதலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் உயிரிழந்த கல்பனாவின் கணவருக்கு இழப்பீடாக ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும் என்ற நெல்லை கோர்ட்டின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு 21 வயது ஆகும் வரையிலோ அல்லது அவர் பட்டப்படிப்பை முடிக்கும் வரையிலோ மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.11 ஆயிரத்து 600-ஐயும் அரசு வழங்க வேண்டும்.

Recent Posts

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!

சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…

29 minutes ago

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடினால் வழக்குப்பதிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

30 minutes ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…

1 hour ago

“அஜித் உடம்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை” – ரேஸிங் அணி வீரர் ஃபேபியன்.!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…

1 hour ago

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

சென்னை : கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…

2 hours ago

பொங்கல் தொகுப்பு – நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…

2 hours ago