கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது!தமிழக அரசு

Published by
Venu

தமிழக அரசு ,தமிழகத்தில் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாகவும், வழிப்பறி திருட்டு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டை தமிழகத்தில் ஒப்பிட்டு பார்க்கும் போது 2017 ஆம் ஆண்டு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆயிரத்து 680 ஆக இருந்த வழிப்பறி குற்றங்களின் என்ணிக்கை 2017 ஆம் ஆண்டு ஆயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது. பண்ணிரெண்டாயிரத்து 128 ஆக இருந்த திருட்டு சம்பவங்களின் என்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 422 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் என்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 2016 ஆம்ஆண்டு 27 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்ணிக்கை 2017 ஆம் ஆண்டு வெறும் 9 ஆக குறைந்துள்ளது. இதே போல் வரதட்சணை, பாலியல் பலாத்காரம், மானபங்கம், பெண்கடத்தல் போன்ற சம்பவங்களின் என்ணிக்கையும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் 2016 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது விபத்துக்களின் எண்ணிக்கையும் ,சாலை விபத்துக்களால் ஏற்பட்ட மரண நிகழ்வுகளும்  2017 ஆம் ஆண்டு குறைந்துள்ளதாக  கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில்  நிகழ்ந்த 71 ஆயிரத்து 431 சாலை விபத்துக்களில் 17 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 2017-ல் நடந்த 65 ஆயிரத்து 562 சாலை விபத்துக்களில் 16 ஆயிரத்து 157 ஆக பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

16 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

36 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

50 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

3 hours ago