கொடைக்கானலில் 57-வது மலர் கண்காட்சி தொடங்கி வைத்தார் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 57-வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.960 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.385 லட்சம் மதிப்பில் 2 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.775.40 லட்சம் மதிப்பில் 3495 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். அமைச்சர்கள் துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், உதயகுமார் எம்.பி., கலெக்டர் வினய் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு முதன்மை செயலர் அபூர்வவர்மா, வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங்பேடி, மேலாண்மை இயக்குனர் பழனிகுமார், சுப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்