கொடைக்கானலில் மருத்துவக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சாலையோரங்களில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள உகார்த்தேநகர் பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து சாலையோரங்களிலும் முட்புதர்களிலும் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதிலும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் இதனை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.