கொடைக்கானலில் காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கம் முழுகடை அடைப்பு …!
கொடைக்கானலில் காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கம் முழுகடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடை அடைப்பு போராட்டமும், விவசாய சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டமும் நடைபெறுகிறது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளி வந்த வண்ணம் உள்ளன.
விக்கிரம ராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் லட்சக் கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கொடைக்கானலில் காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கம் முழுகடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.