உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,தமிழகத்தில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சென்னை முன்னாள் மேயரும் திமுக எம்.எல்.ஏவுமான மா.சுப்ரமணியன் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வாரம் ஒருமுறை குடியிருப்பு பகுதிகளிலும் , நீர் நிலைகளிலும் கொசு புழு கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு மாநகராட்சி தொடர் நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறினார். சீசன்களில் கொசு உற்பத்தியைத் தடுக்க நீர் வழிப்பாதைகளில் ரோபோட்டிக் இயந்திரம் மூலமாக கொசு கொல்லி மருந்து தெளிப்பது, மிதக்கும் பொருட்கள், ஆகாயத்தாமரை உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…