கைலாஷ் யாத்திரைக்காக சென்று நேபாளம் சிமிகோட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அதிகாரிகள் 2 பேர் நேபாளம் பயணம்!

Published by
Venu

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க, டெல்லி தமிழக அரசு இல்லத்திலிருந்து 2 அதிகாரிகளை நேபாளத்திற்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்திலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சென்னை பக்தர்கள் 19 பேர் சிக்கி உள்ளனர்.மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை சென்ற 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியானது.

பின்னர் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது .மீட்புப் பணிக்கு நேபாள அரசிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டுள்ளன.

இந்தியர்கள் மீட்பு பணி தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாக இருக்கும் இந்தியர்களுக்கு உணவு வழங்க இந்திய பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

அதன் பின் தூதரக அதிகாரிகள் மூலம் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடங்கப்பட்டது.

மேலும் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறப்புக்கப்பட்டுள்ளது. 98685 30677, 99682 19303 மற்றும் 011 – 21610285 / 21610286 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  கைலாஷ் யாத்திரைக்காக சென்று நேபாளம் சிமிகோட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அதிகாரிகள் 2 பேர் இன்றிரவு நேபாளம் செல்கின்றனர். டெல்லி தமிழக அரசு இல்லத்திலிருந்து 2 அதிகாரிகளை நேபாளத்திற்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Published by
Venu

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

28 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

41 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

52 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

59 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago