திருவாரூரில் செல்போன் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த கோவையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
அக்பர் அலி என்பவர் மெஜஸ்டிக் மொபைல்ஸ் எனும் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரிடம் செல்போன் வாங்குபவர்களிடம் 15% பணத்தை கூடுதலாக பெற்று அதன்பிறகு கேஷ்பேக் எனப்படும் சலுகையை வழங்கி வந்துள்ளார். அதாவது ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் வாங்கினால் 1,150 ரூபாய் செலுத்த வேண்டும்.
பின்பு அஜந்தா இ வேர்ல்டு எனும் நிறுவனத்தின் உரிமையாளர் பிரகலாதன் என்பவரை நம்பிய அக்பர் அலி அவர் கூறியதை செய்தார் ,அதாவது 90 நாட்கள் கழிந்ததும் மொபைலின் விலையான ஆயிரம் ரூபாயும் வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்கப்படும் என்பதே இந்த சலுகையின் சாராம்சம். இந்த முறையில் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று தனக்கு அளிக்குமாறும், அவ்வாறு தரும் பணத்தை 100 சதவிகிதமாக 90 நாட்களில் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய அக்பர் அலி கடந்த ஆண்டு கேஷ்பேக் சலுகை மூலம் மொபைல் விற்ற பணம் 13.75 லட்சம் ரூபாய் பணத்தை பிரகலாதனிடம் வழங்கியுள்ளார். 6 மாதங்களாகியும் கூறியபடி 100 சதவிகித பணத்தை திரும்ப வழங்காமல் பிரகாலாதன் ஏமாற்றி வந்துள்ளார். அக்பர் அலி புகார் அளித்ததன் பேரில் பிரகலாதனை திருவாரூர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…