கேரள முதல்வர் பினராயிக்கு விஜயனுக்கு நடிகர் விஜய்சேதுபதி பாராட்டு…!!!
தமிழகத்தில் கொடூரமாக வீசிய கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.மேலும் மக்களின் வாழ்வாதாரமான தென்னை மரங்கள் ,வாழை மற்றும் கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியா நிலையில் புயல் சீற்றத்தால் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்தது.மேலும் புயலால் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
Kerala Stands With Tamil Nadu.
Cabinet sanctioned ₹10 Crore in emergency aid to TN. 14 trucks with essential supplies, like food and clothes, were sent earlier.— Pinarayi Vijayan (@pinarayivijayan) November 28, 2018
இந்நிலையில் புயல் புரட்டி போடப்பட்ட டெல்டா மக்களை மீட்டு கொண்டு வர பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்ற நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசியலைக் கடந்து அதற்கு அப்பாற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டிய நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிதி மட்டுமல்லாமல் 14 லாரிகளில் மூலம் நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைப்பதாகவும், 72 மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிக்காக கேரளாவில் இருந்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்…
— VijaySethupathi (@VijaySethuOffl) November 29, 2018
கேரள அரசின் உதவி குறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் புயல் தாக்கிய அடுத்த நாளே மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு,இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.