கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற சீமான் …!சந்தேகித்த போலீஸ் …!சீமானை பிடித்து அதிரடி விசாரணை …!
நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமானிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் உள்ளிட்ட கட்சியினரை கோட்டயம் கிழக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .பொருட்களில் சந்தேகம் இருப்பதால் பரிசோதிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINADUVADU