கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்திவைப்பு…!! கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கூட்டுறவு சங்கத் தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கப் படுவதாக, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கில், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவே நடத்தப்படுவதாகவும் முறையிடப்பட்டிருந்தது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை வாங்கவோ, அவற்றை பரிசீலிக்கவோ கூடாது எனவும், தற்போதைய நிலையே தொடர வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் அறிவித்துள்ளார். உத்தரவு குறித்த ஆணை இதுவரை கிடைக்கவில்லை என்றபோதும், கேள்விப்பட்டதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,