“கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்”தொடரும் நிறுத்தால் நிறுத்தபடுகிறதா மின்சாரம்…???
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1-ஆம் தேதி பராமரிப்புப் பணிகளுக்காக முதல் அணு உலையிலும் 2-ஆம் தேதி வால்வு பழுது காரணமாக 2-வது அணு உலையிலும் உற்பத்திப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. 2-வது அணு உலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் வால்வில் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மொத்தம் 2 ஆயிரம் மெகாவாட்டில் தமிழகத்தின் பங்கான 1124 மெகாவாட் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவாரத்தில் வால்வு பழுது நீக்கப்பட்டு 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சேலம் மேட்டூர் அனல்மின் உற்பத்தி நிலையிலும்,தூத்துக்குடி அனல்மின்நிலையத்திலும் மின் உற்பத்தி நிலக்கரி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் இன்று கூடங்குளம் அனுமின் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின் உற்பத்தி பாதிப்பால் மின்தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
DINASUVADU