குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம் : கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்..!

Default Image
குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம், பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகள் தங்களது கால்களில் ஸ்கேட்டிங் சக்கரங்களை பொருத்தி கொண்டு அணிவகுத்து புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஷில்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது வ.உ.சி. மைதானம், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் சென்று நிறைவடைந்தது.

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ், மத்திய-மாநில அரசுகள் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 5,473 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 5,408 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்பட்டு, நல்வழிபடுத்தப்பட்டு உள்ளனர். தொழிலாளர்களாக கண்டறியப்படும் குழந்தைகள், இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்படும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கல்வியில் ஆர்வமூட்டப்பட்டு, முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
பயிற்சி மையங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள், சீருடைகள், மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் ஊக்க தொகையாக குழந்தைகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.400 செலுத்தப்படுகிறது. சிறப்பு பயிற்சி மையங்களில் படித்த தற்போது கல்லூரியில் மேற்படிப்பு படிக்கும் 26 மாணவ-மாணவிகளுக்கு ஒரு கல்வி ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அந்த நிறுவனங்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஷில்பா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சந்திரகுமார், திட்ட மேலாளர் விசுவநாதன், கள பணியாளர்கள் ரவீந்திரன், சேதுராமன், ராஜேஸ்வரி, தொழிலாளர் நல துறை அதிகாரிகள், சைல்டு லைன் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்