குற்றால அருவியில் 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி!
கோவை குற்றால அருவியில் 10 நாட்கள் தடைக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதியளித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வந்ததால், கோவை சாடிவயலில் உள்ள அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது நீர் வரத்து குறைந்து, பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதால், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.