குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்கத் தடை!
சுற்றுலா பயணிகள் தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில் குற்றாலம் வனப் பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் தடுப்பு வளையத்தைத் தாண்டி விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.