குற்றவாளிகள் மீது மத வேறுபாடின்றி மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்தியாவில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதற்கு மத வெறுப்புப் பிரச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வருகிறார்.இவர், பா.ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, சமூகவலைதளத்தில் அந்த கடைக்காரரின் எட்டு வயது மகன் ஒரு பதிவிட்டுள்ளார். இதனால், கோபமடைந்த சில மர்மநபர்கள், அவருடைய கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி அவரின் தலையை துண்டித்துள்ளனர். மேலும், பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில், பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கு ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து அமைச்சர் மணி தங்கராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உதய்பூரில் நடந்த கொடூர கொலையை வன்மையாக கண்டிக்கிறேன். நாட்டில் மத சகிப்பின்மை குறைந்து வருவதைக் குறிப்பிடுவது ஏமாற்றமளிக்கிறது. குற்றவாளிகள் மீது மத வேறுபாடின்றி மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதற்கு மத வெறுப்புப் பிரச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
Religious hate propaganda has to be rooted out for peace and harmony to prevail in India. 2/2
— Mano Thangaraj (@Manothangaraj) June 29, 2022