குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை…! புதுச்சேரியை நோக்கிப்படை எடுக்கும் தமிழக மக்கள்….!
புதுச்சேரியில் தமிழகத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் குறைவு என்பதால் தமிழக மக்கள் புதுச்சேரிக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த படியே விற்பனையாகிவருகிறது.
ஆனால் புதுச்சேரியில் தமிழகத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதால் இங்கு படையெடுத்து செல்லும் வாகன ஓட்டிகள் அதிகம். இன்றைய நிலவரப்படி கடலூரில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ .85 .81 காசுகளாக உள்ளது. ஆனால் அதுவே புதுச்சேரியில் ரூ.79. 65 காசுகளாக உள்ளது. புதுச்சேரியில் இதேபோல் டீசலின் விலையும் கடலூரை விட குறைவு தான்.