குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் நாளை (29-01-2018) முதல் அமலுக்கு வரும்…!!
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனக்கூறியிருந்தார்.
எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது.தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு.
இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் நாளை (29-01-2018) முதல் அமலுக்கு வருகிறது..