குரூப்-2 தேர்வில் தவறான விடை ….. 6 கேள்விகளுக்கு 9 மதிப்பெண்…..டிஎன்பிஎஸ்சி உத்தரவு..!!
குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை விவகாரத்தில் 9 கருணை மதிப்பெண்கள் வழங்க டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் வருவாய்த் துறை உதவியாளர், சார் பதிவாளர் உள்ளிட்ட காலியாக உள்ள ஆயிரத்தி 199 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 11ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்தியது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வை 6 லட்சத்து 26,726 பேர் எழுதினர்.
இந்த தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை கேட்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், குரூப்-2 தேர்வில் தவறான விடை கொடுக்கப்பட்டிருந்த 6 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற கணக்கில் 9 கருணை மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்.சி. செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
இதனிடையே, வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவிருந்த வனவர், வனக்காவலர், ஓட்டுநர் உரிம வனக்காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளும் கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU.COM