குன்னூரில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை..!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மாலை தொடங்கிய மழை இரவும் விட்டு விட்டு நீடித்தது.
மழைக்கு ஆங்காங்கே சுற்றுலாப் பயணிகள் ஒதுங்கி நின்றனர். மலைப்பாதையில் செல்லும் வாகனங்களை மெதுவாக இயக்கி செல்லுமாறும் சாலையோர மரங்களின் அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர் உதகையிலும் இரவு சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது.
இதனால் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்