குட்நியூஸ்…இவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்வு – தமிழக அரசு அரசாணை!

Default Image

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு வழங்கும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரச்சனையில் கூறப்பட்டுள்ளதாவது:

“தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கருணைத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கு அரசு கொள்கை ரீதியான நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது.பாழடைந்த குடியிருப்புகளை புனரமைக்கும் பணி தொடங்குதலுக்கு இரண்டு தவணைகளில் அதாவது முதல் தவணையாக ரூ. 12,000 மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு இரண்டாவது தவணையாக ரூ.12,000 வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தொகை இடமாறுதல் மற்றும் அடுத்தடுத்து வாடகை இடங்களில் தங்கும் போது தேவையான செலவினங்களைச் சந்திக்க அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கிடையில்,புனரமைப்பில் உள்ள 9242 குடிமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட கருணைத் தொகையாக ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.24,000 ஐ ஒரே தொகுப்பாக வழங்கத் தேவையான நிர்வாக அனுமதியை வழங்குமாறு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கோரியுள்ளார்”,எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்