குட்கா விவகாரம்:யார் காரணமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்!உயர் நீதிமன்றம்

Default Image

சென்னை உயர்நீதிமன்றம் ,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மீது புகார் கூறப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், 2015ம் ஆண்டு எம்.டி.எம். பான்மசாலா நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சி.பி.ஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு இப்புகாரை விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிட்டனர். குட்கா ஊழலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ யார் உடந்தையாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

குட்கா ஊழலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ யார் உடந்தையாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.  மாநில லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்புகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பல மாநிலங்கள் தொடர்புடைய வழக்கு என்பதையும் மத்திய சட்டங்களும் இவ்வழக்கில் மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். லஞ்சப்புகார் மட்டுமின்றி குட்கா உற்பத்தி, விநியோகம் விற்பனை என பல நடவடிக்கைகளையும் விசாரிப்பது அவசியம் என்பதால் சி.பி.ஐ.தான் சரியான அமைப்பு என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவிநீட்டிப்பு தொடர்பான வழக்கும் குட்கா விவகாரம் தொடர்புடையது எனும் நிலையில்,  அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க முடியுமா என கேள்வி எழுப்பினர். மாநில விசாரணை அமைப்புகளின் திறனை குறைத்து மதிப்பிடுவது நோக்கம் அல்ல என்றாலும், நிர்வாக காரணங்களால் வழக்கின் விசாரணை மாற்றப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்