குட்கா வழக்கு : நாளை ஒய்வு பெற இருந்த மதுரை ரயில்வே காவல்துறை டிஎஸ்பி மன்னர்மன்னன் இன்று பணியிடை நீக்கம்
குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆளான டிஎஸ்பி மன்னர்மன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குட்கா முறைகேடு நடைபெற்றபோது மன்னர்மன்னன் புழல் சிறையில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆளான மதுரை ரயில்வே காவல்துறை டிஎஸ்பி மன்னர்மன்னன் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில் மன்னர்மன்னன் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.