குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ.
செப்டம்பர் 5 ஆம் தேதி குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது .குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது.
இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.
முதலாவதாக குட்கா ஊழல் வழக்கில் ராஜேஷ், நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர் .
இதன்பின்னர் குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது செய்யப்பட்டனர் .அதில் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் ஏ.வி மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குட்கா தயாரிப்பு நிறுவன அதிபர் பி.வி.சீனிவாச ராவை கைது செய்தது சிபிஐ.இதுவரை ஊழல் தொடர்பாக 7 பேரை கைது செய்தது.
இந்நிலையில் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர ஏ.வி மாதவ ராவை சிபிஐ அதிகாரிகள் அவரது குடோனில் வைத்தே விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணைக்கு பின்னர் குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…