தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை நடத்திய விவகாரத்தில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவுகிறது.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இது தொடர்பாக கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதில் உண்மை வெளிவரட்டும். அதன்பிறகு குற்றம் இருந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடக்கும் போதே ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தேவை அற்றது. 5 அதிகாரிகளை கைதுசெய்து இருப்பது சிறைக்காவலில் விசாரணை நடத்துவதற்காகத்தான். அவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அழைத்து செல்லப்படவில்லை.
மேலும் அழகிரி பேரணி நடத்திய தினத்தில், குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியது ஏன்? என்றும் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளதாகவும் பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் சிபிஐ சோதனைக்கு காரணம் திமுக, பாஜகவுக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பு என்றும் கூறினார்.
அதேநேரம் மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், சிபிஐ விசாரணையை பொறுத்தவரை, யாரும் தலையிட முடியாது என விளக்கம் அளித்துள்ளார். இதனால் தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை நடத்திய விவகாரத்தில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவுகிறது.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…