குட்கா ஊழல் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு காவல் ஆய்வாளர் சம்பத் ஆஜராகியுள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.
இதேபோல் குட்கா ஊழல் நடந்த காலகட்டத்தில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.தற்போது இதில் மன்னர் மன்னன் மதுரை ரயில்வே டி.எஸ்.பி.யாகவும், சம்பத் குமார் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளராகவும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ முதல்முறையாக காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் வழக்கில் பரபரப்பு அதிகரித்தது.
இந்நிலையில் குட்கா ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு காவல் ஆய்வாளர் சம்பத் ஆஜராகியுள்ளார்.
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என…
மும்பை : இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி…