குட்கா ஊழல்…!சிபிஐ விசாரணையில் முதல் முறையாக காவல் ஆய்வாளர் சம்பத் விசாரணைக்கு ஆஜர் …!

Default Image

குட்கா ஊழல் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு காவல் ஆய்வாளர் சம்பத் ஆஜராகியுள்ளார்.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.

இதேபோல் குட்கா ஊழல்  நடந்த காலகட்டத்தில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் சம்பத் குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.தற்போது இதில் மன்னர் மன்னன்  மதுரை ரயில்வே டி.எஸ்.பி.யாகவும், சம்பத் குமார் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளராகவும் உள்ளனர்.

சம்பத் வீட்டில் சோதனை

இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ முதல்முறையாக காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் வழக்கில் பரபரப்பு அதிகரித்தது.

இந்நிலையில் குட்கா ஊழல்  வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு காவல் ஆய்வாளர் சம்பத் ஆஜராகியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்