குட்கா ஊழல்- சிபிஐ ரெய்டு….!திமுக-பாஜக மெகா கூட்டணி…!அதிமுகவிற்கு துரோகம் …!குமுறும் மக்களவை துணை சபாநாயகர்
அதிமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கவே அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.
இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இது தொடர்பாக கூறுகையில்,அதிமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கவே அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மு.க.அழகிரி நடத்திய பேரணியை இருட்டடிப்பு செய்யவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. திமுக-பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருவதால் அதிமுகவுக்கு கவலையில்லை.திமுகவானது பாஜகவுடன் உறவை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.