குட்கா வழக்கில் தொடர்புடைய அனைவரையும் டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க சிபிஐ திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
நேற்று குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது.
இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில் குட்கா வழக்கில் சிபிஐ நடத்திய சோதனையின் முடிவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதில் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர ஏ.வி மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இன்று காலை குட்கா ஊழல் வழக்கில் ராஜேஷ், நந்தகுமார் ஆகிய இரு இடைத்தரகர்கள் இன்று கைது செய்யப்பட்டனர் .இதுவரை ஊழல் தொடர்பாக 6 பேரை கைது செய்தது.
இந்நிலையில் குட்கா வழக்கில் தொடர்புடைய அனைவரையும் டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க சிபிஐ திட்டம் என தகவல் தெரியவந்துள்ளது.இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட பலருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…