குட்கா ஊழல் …!அமைச்சர், டிஜிபி ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் …!மு.கே.ஸ்டாலின்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 7 பேரை விடுதலை செய்ய, முதல்வர் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.மேலும் குட்கா ஊழலை முதன் முதலில் சட்டப்பேரவையில் தெரிவித்தது திமுக தான். தமிழக வரலாற்றிலேயே டிஜிபி வீடு, அலுவலங்களில் சோதனை நடைபெறுவது இதுவே முதல்முறை. குட்கா புகாரில் தொடர்புடைய அமைச்சர், டிஜிபி ஆகியோரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.