குடைந்த குட்கா..!குமுறிய ஆணையர் ஜார்ஜ்..!!விஸ்வரூப எடுக்கும் குட்கா..!

Published by
kavitha

குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர்,காவல் என்று அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரனை விடிய விடிய நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்,தற்போது சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் என அடுக்கடுக்கான ஆதரங்களில் அரசிற்கு ஆப்பு வைக்கும் குட்கா ஊழல் அனைவரையும் உறங்க விடாமல் செய்துள்ளது.

இதனிடையே இன்று சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இது குறித்து  வாய் திறந்துள்ளார்.

இது குறித்து கூறியதாவது

  • 33 ஆண்டு காலமாக பணியில் இருந்த நான் தவறு செய்யவில்லை. பணம் எதுவும் வாங்கவில்லை. 2015 அக்டோபர் முதல் 2016 செப்., வரை நான் சென்னை காவல் ஆணையராக  இல்லை.2016 செப்டம்பரில் தான் நான் ஆணையராக பதவியேற்றேன்.
  • குட்கா விவகாரத்தில் பணம் அளிக்கப்பட்டதாக கூறப்படும் தேதிகளிலும், திமுக எம்எல்ஏ அன்பழகன் மனுவில் குறிப்பிட்ட தேதிகளிலும் நான் சென்னை  காவல் ஆணையராக  இல்லை. சிபிஐ எப்ஐஆரிலும் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை.
  • நான் காவல் ஆணையராக  பதவியேற்றதும், குட்கா ஊழல் குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. காவல் ஆணையர்கள் சிலரது பெயர்களும் அடிபட்டன. எனது கவனத்திற்கு வந்த போது, மேலிடத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
  • குட்கா குடோன் என புகார் கூறப்பட்ட இடத்தில், சோதனை செய்த போது புகையிலை எதுவும் இல்லை என அறிக்கை அளித்தனர். இதனால், உரிய விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு நான் கடிதம் அனுப்பியது அனைவருக்கும் தெரியும்.
  • ஊழல் குறித்து எனது கவனத்திற்கு வந்தபோதே மேலிடத்தில் இது குறித்து ஆலோசனை நடந்தது. அந்த சமயத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
  • குட்கா விவகாரம் தொடர்பாக மாதவரத்தில் துணை கமிஷனராக இருந்த விமலாவை அழைத்து விசாரித்தேன். ஆனால், எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்த விவரத்தை உயரதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டதாக தெரிவித்தார்.
  • குட்கா குடோனை சோதனை செய்ய சென்ற போலீசாரை துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் வேறு பணிக்கு செல்லுமாறு கூறினார். எனது கவனத்திற்கு வந்த போதே பல காலமாக இந்த பிரச்னை இருப்பது தெரியவந்தது.
  • 2015 ல் போலீஸ் உயரதிகாரி நல்லசிவத்திடம் குட்கா விவகாரத்தை தெரிவிக்கவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, துணை ஆணையர் ஜெயக்குமார் எதுவும் சொல்லவில்லை என்றார். 2016 ல் வரதராஜூவிடம் குட்கா குறித்து கேள்வி எழுப்பினேன். அவரும் தெரியாது என கூறினார்.
  • உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜூ குட்கா விவகாரம் குறித்து ஏதேனும் தெரிவித்தாரா என டிகே ராஜேந்திரனிடம் கேட்ட போது, தனக்கு எந்த தகவலும் தெரியாது எனக்கூறினார். சட்டவிரோத செயல் குறித்து உளவுத்துறை தகவல் அளித்தும் துணை ஆணையர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயக்குமார் பணித்திறமை இல்லாதவர் என நான் ஏற்கனவே அறிக்கை கொடுத்துள்ளேன்.
  • மோசமாக பணியாற்றுவதாக அறிக்கை சமர்ப்பித்தேன். அவர் அனைத்து உண்மைகளையும் மறைத்து விட்டார்.குட்கா விவகாரத்தில் என்னை குறி வைத்து செயல்படுவது வருத்தம். குட்கா போன்ற பெரிய விவகாரம் போலீஸ் கமிஷனர் ஆதரவுடன் மட்டும் நடக்குமா? தமிழகத்தில் முறைகேடாக குட்கா விற்க நான் லஞ்சம் வாங்கவில்லை.
  • கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நான்பணம் வாங்கியதாக கூறப்படுவது தவறு.
  • முன்னாள் போலீஸ் கமிஷனர் ஒருவருக்கு எதற்காக பணம் தரப்போகிறார்கள். குட்கா ஊழல் நடக்கவில்லை எனக்கூறவில்லை. நடந்திருக்கிறது. யாரும் பணம் பெறவில்லை எனக்கூறவில்லை. யார் பெற்றார்கள் எனத்தெரியாது.
  • எனது பெயரை சேர்த்தில் 100 சதவீத உள்நோக்கம் உள்ளது. டிகே ராஜேந்திரனையும் என்னையும் போலீஸ் டிஜிபியாக நியமிக்கக்கூடாது என்பதற்காக இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கலாம்.
  • ராஜேந்திரனை டிஜிபியாக நியமிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக ஆவணங்கள் வெளியிடப்பட்டன. வேண்டுமென்றே சிலரது பெயரை சேர்த்து கசியவிட்டனர். துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் உயரதிகாரிகளுக்கு சரியான தகவலை தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Image result for vijayabaskar - cm palanisamy

இந்த செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வரை சந்திக்க அவருடைய வீட்டிற்கு பறந்தார்..!பரப்பான விசாரணை..!பயத்தில் முதல்வர் வீட்டிற்கு பறக்கும் அதிகாரிகள் பரபரப்பை ஏற்படுத்திய ஜார்ஜின் பேட்டி என குட்கா ஊழல் விஸ்வரூப எடுத்துள்ளது.

 

Published by
kavitha

Recent Posts

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

18 minutes ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

3 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

3 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

4 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

4 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

5 hours ago