குடைந்தெடுக்கப்பட்ட குட்கா லஞ்ச வழக்கு..! அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ .!!இன்று ஆஜராகிறார் மாண்புமிக அமைச்சர்..!!
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி முறைகேடாக குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை இந்த விவகாரத்தில் முன்வைத்தது.மேலும் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்,தமிழக காவல்துறை இயக்குநர் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இந்த விவாகரத்தில் சிபிஜ தனது நேரடி பார்வையில் விசாரணையை நடத்தி வருகிறது.
மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் இதில் லஞ்சம் அளிக்கப்பட்டதற்கான டைரி சிபிஜ வசம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த குட்கா ஆலையின் உரிமையாளரான மாதவ்ராவ் உள்ளிட்ட 6 பேர் இதுவரை சிபிஜயால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஜ சம்மன் அனுப்பியுள்ளது அதன்படி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் குட்கா லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் ரமணாவும் ஆஜராகி விளக்கமளிக்க சிபிஐ அவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.