குடும்பத்துடன் சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் முக.அழகிரி.
இன்று 10ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,உதயநிதி ஸ்டாலின்,கருணாநிதி மனைவி தயாளு அம்மாள்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.மேலும் தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.திடீரென்று அனைவரும் வருவதால் அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.தயாளு அம்மாள் மருத்துவ மனைக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.இதேபோல் மு.க.அழகிரியும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. அழகிரி பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என்று தெரிவித்தார்.
இதன் பின் தனது குடும்பத்துடன் சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் முக.அழகிரி .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…