குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் ஆட்டோவில் கடத்தல்..!

Published by
Dinasuvadu desk
குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் ஏட்டுகள் பாபு, செல்லபாண்டியன் ஆகியோர் இன்று அதிகாலை 2½ மணியளவில் பிச்சனூர் அரசமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை மடக்க முயன்றனர். போலீசார் மீது மோதுவது போல் ஆட்டோ நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை விரட்டி சென்றனர். 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆட்டோவை ஒரு புதர் மறைவில் நிறுத்திவிட்டு கும்பல் தப்பி ஓடியது.

போலீசார், கும்பலை பிடிக்க பின்தொடர்ந்தனர். கும்பல் சிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டோவில் பார்த்த போது சீல் பிரிக்காத 25 பெட்டிகளில் சுமார் 900 மது பாட்டில்கள் இருந்தது.

மதுபாட்டில்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் கும்பல் வந்த பாதையில் உள்ள டாஸ்மாக் கடைகளை சென்று பார்வையிட்டனர்.

காளியம்மன்பட்டி சாமியார்மலையில் உள்ள மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. உடனடியாக அந்தக்கடை விற்பனையாளர் துரைபாபு மற்றும் மேற் பார்வையாளர் சரவணனை வரவழைத்தனர்.

மதுக்கடை பூட்டுகளை உடைத்த கொள்ளை கும்பல், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா இருக்குமோ? என்ற பீதியில் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பிறகு, உள்ளே புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி ஆட்டோவில் கடத்தியது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார், மதுபாட்டில்கள் கடத்திய கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது, கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள காளியம்மன்பட்டி மாணிக்கம் நகரில் உள்ள மதுக்கடையில் கடந்த மாதம் 9-ந் தேதி 350 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடினர்.

ஒரே பகுதியில் அடுத்தடுத்துள்ள மதுக்கடைகளில் கொள்ளை நடந்துள்ளதால், ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இரவு நேரத்தில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், மதுபான பாட்டில்கள் திருடியதை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே, இரவு நேரங்களில் போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கை, ரோந்து பணியில் ஈடுபட்டால் குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Recent Posts

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

37 minutes ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

39 minutes ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

1 hour ago

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

2 hours ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

2 hours ago

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

3 hours ago