ரூ.12 லட்சத்திற்கு குடிசை மாற்றுவாரியத்தில் வீடு வாங்கி தருவதாககூறி மோசடி நடந்தது. இது தொடர்பாக கோவை கலெக்டர் அலுவலகம் முன் கணவன்-மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்திருந்தனர்.இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் மனு கொடுக்க வந்த பொதுமக்களை சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். அப்போது ஒரு தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் திடீரென்று பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
எனவே இதை அங்கிரிந்த போலீசார் விரைந்து வந்து அங்கு குடத்தில் தயாராக வைத்திருந்த தண்ணீரை அவர்கள் மீது ஊற்றினர். பின்னர் அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.விசாரணையில் அவர்கள் கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 47), அவருடைய மனைவி சுகுணா (39) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் ஜெயக்குமார் குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாக கூறி திருமலை என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார் என்று கூறினார். அவர் என்னிடம் பணம் கொடுத்தால் குடிசை மாற்றுவாரிய வீடுகளை வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி நான் அவரிடம் ரூ.70 ஆயிரம் கொடுத்தேன். மேலும் எங்கள் பகுதியை சேர்ந்த 15 பேரிடம் ரூ.12 லட்சம் வரை வசூல் செய்து அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி எங்களுக்கு வீடு வாங்கி கொடுக்க வில்லை.
உடனே குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது திருமலை என்று யாரும் இங்கு பணிபுரியவில்லை என்று கூறினர். இதனால் அதிர்ச்சிஅடைந்த நாங்கள் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் எங்களிடம் பணத்தை கேட்டு தொல்லை செய்கின்றனர்.
எனவே திருமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே தான் நாங்கள் தீக்குளிக்க முடிவு செய்தோம் என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…