குடிகாரர்களின் பாராக மாறும் மருத்துவமனை!
பேரையூர் தாலுகா அலுவலகம் அருகில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையால் இப்பகுதியிலுள்ள பேரையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் பயன்பெறுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மருத்துவமனை பேரையூர் பைபாஸ் சாலையில் இருந்து பார்த்தாலும் பொதுமக்கள் விரைவாக அடையாளம் காணும் வண்ணம் இருந்தது. இப்போது ஆக்கிரமிப்புகளால் கால்நடை மருத்துவமனை எங்கிருக்கிறது என்பது தெரியாத அளவில் மறைந்து கிடக்கிறது. மேலும் இப்பகுதியிலுள்ள இந்த மறைவான இடம் இயற்கை சூழ்ந்து உள்ளதால் எப்போதும் பாராக கால்நடை மருத்துவமனை வளாகத்தை குடிமகன்கள் பயன்படுத்துகின்றனர். காலையில் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் மருத்துவமனையை திறக்க வந்தால் மதுப்பாட்டில்கள், ஊறுகாய் பாக்கெட், கப் என சகலங்களும் வாசலில் கிடக்கிறது. தினமும் இதனை சுத்தம் செய்த பின்புதான் உள்ளே செல்ல முடியும். போதையில் சில குடிமகன்கள் பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர்.இதனை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.