குஜராத் மாடலில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை ! ஐபிஎஸ் அதிகாரி தகவல்..!
தமிழகத்தில் தற்போது நடந்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடைபெற்ற திட்டமிட்ட சம்பவங்கள் போல் இருக்கிறது என ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மோடிக்கு நெருக்கமான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை ஆரம்ப முதலே சட்டவிதிகளுக்கு மாறாக மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இயங்கி வருகிறது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் முன் தயாரிப்போடு இருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கொடூரமாக சுட்டுத்தள்ளினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சி காலம் முதல் பணியாற்றி வரும் சஞ்சீவி பட் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இது குஜராத் மாடல் படுகொலை என விவரித்திருக்கிறார். காரணம் குஜராத்தில் பாஜகவிற்கு எதிரான கருத்துகளை உடையவர்கள் திட்டமிட்டு குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே போல் தற்போது தூத்துக்குடியில் உயிரிழந்த 13 பேரில் 8 பேர் போராட்டத்தை ஒருங்கிணைத்து வந்த முன்னணி ஊழியர்கள் என தெரிய வந்திருக்கிறது. இவர்கள் அனைவரையும் திட்டமிட்டு குறிவைத்து காவல்துறையினர் அருகில் இருந்து சுட்டு கொன்றிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
” நாம் அனைவரும் விழித்துக்கொள்வதற்காக நிகழ்ந்த சம்பவமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய மக்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். வேதாந்தா குழுமத்தின் ஆபரேஷன்
குஜராத் மாடல் போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளுக்காக, அதிமுக தன்னுடைய மன்னிப்புகளை கேட்டுக்கொள்வது போல் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்….