கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளின் விற்பனை விறுவிறுப்பு….!!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் பொம்மைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இயேசு கிறிஸ்து மாட்டு தொழுவத்தில் பிறந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வழிபடுவார்கள். இதனை முன்னிட்டு விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
13 பொம்மைகள் உள்ள ஒரு செட்டின் விலை ரூபாய் 750 முதல், ரூபாய் 1,050 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இதன் விற்பனை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.