கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரிகளை தூர் வாரும் பனி நடைபெறுகிறது!

Default Image
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சொரக்காயலபள்ளி மற்றும் கோட்டங்கிரியில் உள்ள ஏரிகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், சூளகிரி ஒன்றியம், இம்மிடிநாயக்கனபள்ளி அருகே உள்ள சொரக்காயலபள்ளி ஏரி மற்றும் அங்கொண்டபள்ளி அருகே கோட்டங்கிரி ஏரியில் தூர்வாரும் பணிகளை, சூளகிரி வட்டார ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த 2 ஏரிகளும் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், கரைகளை பலப்படுத்தும் வகையில் மண்ணை உயர்த்தி கொட்டப்பட வேண்டும். இந்த பணிகளுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
அப்போது, ஓசூர் வருவாய் கோட்ட அலுவலர் விமல்ராஜ், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாஸ்கர், ஆப்தா பேகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்