கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Default Image

அணையில் புதிய மதகு பொருத்தும் பணி வியாழனன்று நடைபெறுகிறது. இதற்காக தற்போது 35 அடியாக உள்ள நீர் மட்டத்தை 31.50 அடியாக குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே காலையில் வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர் திறப்பு மாலையில் ஆயிரத்து 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அணையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் கேஆர்பி அணையை பார்வையிட்டதுடன், மதகு பொருத்தும் பணிக்கான பொருட்களையும் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தென்பெண்ணையாற்றில் நுரை கலந்து வந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ரசாயன கழிவுகள் கலப்பது தொடர்பாக கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

ஏற்கெனவே கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கியது தொடர்பாக மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும், முடிவுகள் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்