கிருஷ்ணகிரி இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!
இரண்டு இருசக்கர வாகனங்கள் கிருஷ்ணகிரி அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
சூளகிரி அடுத்த கொத்தகுருக்கி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், லோகேஷ், ரவி ஆகிய மூவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல ஒரே இருசக்கர வாகனத்தில் கிளம்பினர். ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி சூளகுண்டா பகுதிக்கு அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
இதே போல, மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகுணாந்த் என்பவர் ராயக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் காலன் கொட்டாய் என்ற இடத்தில் வரும் பொழுது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.