கிருஷ்ணகிரி அருகே மருத்துவமனையில் மருத்துவர்கள் வராததால், துப்புரவுப் பணியாளர்களே சிகிச்சை பார்க்கும் அவலம்!
துப்புரவுப் பணியாளர்களே கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் வராததால்,சிகிச்சை பார்க்கும் அவலம் நிலவுகிறது.
அங்குள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், சரவணன், கார்த்திக், நிதின், சவுந்தர்யா, லோகேஷ், நிவேஷ், பூவிழி ஆகிய 7 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, குப்பம் ஆகிய இடங்களில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருவதாகவும், அங்கேயே இருந்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு முறையாக வருவதில்லை எனவும் நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். எப்போதாவது அரசு மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், நோயாளிகளை தங்கள் கிளினிக்குக்கு வருமாறு வற்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், விபத்துகளில் சிக்கி காயங்களுடன் வருபவர்களுக்கு, வேறு வழியின்றி துப்புரவு பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் நிலை நிலவுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.