கிருஷ்ணகிரியில் பரிதாபம்.! மின்மோட்டார் வயரை இழுத்து மின்சாரம் தாக்கி ஒற்றை யானை உயிரிழப்பு.!

Default Image

கிருஷ்ணகிரி மாவட்டம் மின் வயரை இழுத்து மின்சாரம் தாக்கி ஒரு காட்டு யானை உயிரிழந்துள்ளது .

கிருஷ்ணகிரி மாவட்டதின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காடுகள் பகுதி அதிகம் என்பதால் அங்குள்ள எல்லை கிராம பகுதிகளில் கர்நாடாக மாநிலத்தின் காடுகளில் இருந்து யானைகள் வருவது அதிகம்.  அண்மையில் கூட 200க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறை அதிகாரிகள் காட்டுக்குள் விரட்டினர்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டை வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன. அதில், ஒரே ஒரு காட்டுயானை மட்டும் அங்குள்ள ஒருவரின் தென்னந்தோப்பில் உணவுக்காக நேற்று இரவு புகுந்துள்ளது.

அப்போது அங்கு மின் மோட்டாருக்கு வைத்திருந்த மின் வயரை யானை இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தோட்ட உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் குழு விரைந்து வந்து யானையின் உடலை ஆய்வு செய்து வருகின்றனர்.

யானை நடமாடும் பகுதியில் மின்வேலி அல்லது மின் வயர் இணைப்புகளை வைக்க கூடாது என்பது விதியாக இருக்கும் போது எப்படி இந்த சம்பவம்  நடந்தது என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்