அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும் கிருஷ்ணகிரியில் கல்வி வழிக்காட்டுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, இதற்கான தொடக்கவிழா மற்றும் மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி இம்மையத்தை தொடங்கி வைத்தார். மாணவர் சேர்க்கை விழா 2 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் நாளான இன்று ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்ற 17 மாணவ, மாணவிகள், தங்களது மாற்றுச் சான்றிதழ்களோடு வந்து அரசு பள்ளியில் சேர்ந்தனர். மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் தோறும் கல்வி வழிக்காட்டுதல் மையம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார். கிராமங்கள் தோறும் சென்று அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்து 147 மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கான அறிவுரை, பல்வேறு துறைகளின் மூலம் பெறப்படும் கல்வி சார்ந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவை கல்வி வழிக்காட்டுதல் மையங்கள் மூலம் வழங்கப்படும் எனவும் மகேஸ்வரி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…