கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி : ஏ.சி.சண்முகம்
மக்களவை தேர்தல் நெருங்கி வேறுவதையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை துவங்கி உள்ளனர். அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தங்கள் மக்களை சந்தித்து பேசி வருகின்றனர். மேலும் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், இத்தொகுதியில் வெற்றி பெற்றால் 6 எம்எல்ஏ தொகுதியிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்றும், கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். .