கோயம்புத்தூர் மாவட்டம் வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி – வேலுமணி தம்பதியினர் ஒரு தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் அன்றும் வழக்கம் போல சண்டை போட்டு கொண்டிருந்தனர். அவர்களது மகள் சித்ரா என்பவர் பெற்றோர்களின் சண்டையை தடுக்க முயன்றுள்ளார்.
மகளின் பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு மீண்டும் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா அருகில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார் என கூறப்படுகிறது. இதனை கண்ட சித்ராவின் அண்ணன் அருண்குமார் தங்கையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்துள்ளார். இருந்தும், இருவருமே நீரில் மூழ்கி பலியாகி விட்டனர். அருண்குமாருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…