காவேரி நீர் நமது உரிமை….! அதை கேட்பது நமது கடமை ..!தொண்டர்களுக்கு மாதவன் அழைப்பு!
காவிரி விவகாரம் தொடர்பாக எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாதவன் கழக உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறவும், தமிழக விவசாயிகளின் அவலநிலை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாற வேண்டும்.காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அறவழியில் போராடும் தமிழக விவசாயிகள் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்களுடன், எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அனைவரும் இன்று முதல் தங்களை முழுவதுமாக இணைத்துக் கொண்டு தமிழக உரிமையை காக்க அறவழியில் போராடுவோம் என்று தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், காவேரி நீர் நமது உரிமை. அதை கேட்பது நமது கடமை என்று எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாதவன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.