காவு வாங்க துடித்த கஜா…! முழுமையாக கரையை கடந்தது…6 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!
கரை கடந்தது கஜா புயல் ஆனால் 6 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை நேற்றிலிருந்து கடுமையாக மிரட்டி வந்த கஜா முழுமையாக கரையை கடந்தது என்றும் கஜா புயல் முழுமையாக கரையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தற்போது தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அதிராம்பட்டினத்தில் 100 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் கஜா புயல் கரையை கடந்ததாகவும் தகவல் தெரிவித்த அவர் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை,காரைக்கால்,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து.கஜா 6 மாவட்டங்களில் தன்னுடைய பெரும் சேதத்தை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
DINASUVADU